வீவக வீடு மறுவிற்பனை, தனியார் வீட்டு விலை இறக்கம்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் மறுவிற்பனை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண் டில் 5.5% குறைந்து 5,514 வீடு களாக இருந்தது என்று வீவக தெரிவித்திருக்கிறது. இந்த எண் ணிக்கை முந்தைய காலாண்டில் 5,838 ஆகும். மறுவிற்பனை விலை அட்ட வணையில் மாற்றம் இல்லை. அது 134.7 ஆகவே இருந்தது. பல்வேறு நகரங்களில் இருக்கும் வீடுகளுக் கான மறுவிற்பனை சராசரி விலை யைக் கழகம் வெளியிட்டு இருக் கிறது. வீட்டை வாடகைக்குக் கொடுக்க அனுமதிக்குமாறு கேட்டு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மூன்றாவது காலாண்டில் 8.8% குறைந்து 10,789 ஆக இருந்தது. செப்டம் பர் 30ஆம் தேதி நிலவரப்படி வீவக வின் 52,394 வீடுகள் உள் வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந் தன. இது இரண்டாவது காலாண் டைவிட 0.4% அதிகம்.

பிடோக், பிடாடரி, காலாங் / வாம்போ, பொங்கோல் ஆகிய இடங்களில் சுமார் 5,090 புதிய வீடுகளை நவம்பரில் வீவக விற் பனைக்கு விடும். முந்தைய விற்பனை நடவடிக் கைகளில் விற்காமல் எஞ்சியிருக் கும் 5,000 வீடுகளும் விற்பனைக் குக் கொடுக்கப்படும். மேல் தகவல்களைக் கழகத்தின் இணையப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்கிடையே, சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் ஒட்டு மொத்த விலை மூன்றாவது காலாண்டில் 1.5% இறங்கியது என்று நகர சீரமைப்பு ஆணை யத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த விலை தொடர்ந்து 12வது காலாண்டாக குறைந்து வருகிறது. மூன்றாவது காலாண் டில் 1,981 தனியார் வீடுகள் விற்பனையாயின. இது இரண் டாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது 12% குறைவு. தனியார் வீடுகளின் மறுவிற்பனை, ஜூலை, செப்டம்பர் காலகட்டத் தில் 1.2% இறங்கியது. இந்தக் குறைவு இரண்டாவது காலாண்டில் 0.6% ஆக இருந் தது. மிக முக்கிய மத்திய வட் டாரத்தில் அடுக்குமாடி வீடு விலை 1.1% இறங்கியது. நகர விளிம்புப் பகுதி, புறநகர்ப் பகுதிகளில் இந்த இறக்கம் 1%.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!