நோயாளிக்கு விரிவான சிகிச்சை கட்டணப் பட்டியல் தர ஏற்பாடு

சமூக சுகாதார உதவித் திட்டத் தில் கலந்துகொண்டுள்ள தனியார் மருத்துவர்களிடம், பல் மருந்தகங் களில் மானியத்துடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஒவ் வொன்றையும் விளக்கும் விரிவான கட்டணப் பட்டியலை அத்தகைய அனைத்து தனியார் மருத்துவர் களும் பல் மருந்தகங்களும் கொடுக்க வேண்டியது 2017 ஜன வரி 1 முதல் கட்டாயமானதாகிறது. சுகாதார அமைச்சு நேற்று இதனை அறிவித்தது. மருந்தகங்கள் வசூலிக்கும் கட்டணம்=நோயாளிக்கு கிடைக் கும் மானியம் ஆகிய இரண்டும் ஒளிவுமறைவு இல்லாமல் தெரிய வந்தால் மருந்தகங்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு அதிகமாகும் என்று சுகாதார துணை அமைச்சர் டாக் டர் லாம் பின் மின் தெரிவித்தார்.

மருத்துவரைப் பார்ப்பதற்கான கட்டணம், மருந்துக்கான கட்ட ணம், மருத்துவச் சோதனைக்கான கட்டணம், மற்ற கட்டணங்கள் எல்லாம் தனித்தனியாகக் குறிப் பிடப்பட்டு, மானியத்தைக் கழிக் காமல் மொத்த கட்டணம், எவ்வளவு என்பது பட்டியலில் தெரிவிக்கப்படவேண்டும். கிடைக்கக்கூடிய மானியம் எவ்வளவு என்பதையும் கட்டணப் பட்டியல் குறிப்பிட வேண்டும்.

மானியம் போக நோயாளி செலுத்தவேண்டிய தொகை எவ்வளவு என்பதும் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. முழு மானியம் பெறுகின்ற, கையில் இருந்து பணத்தைக் கொடுக்காத நோயாளிகளுக்கும் இத்தகைய விவர பட்டியலைத் தர வேண்டும். இப்பொழுது இத்தகைய பட்டியலை சில மருந்தகங்கள் கொடுப் பதில்லை. கேட்டால் மட்டுமே இத்தகைய பட்டியலை அவை கொடுக்கின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ