புதிய வரவுடன் பொலிவான தீபாவளி

முஹம்­மது ஃபைரோஸ்

சிங்கப்­பூ­ரின் பொன்விழா ஆண்டில் மண­ வாழ்க்கையைத் தொடங்­கிய செம்ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விக்ரம் நாய­ருக்கு சென்ற ஆண்டு தலைத் தீபா­வ­ளி­யாக இருந்தா­லும் இவ்­வாண்டு புது வரவான மகள் இந்­தி­ரா­வு­ட­னும் குடும்பத்­தா­ரு­ட­னும் மகிழ்ச்­சி­க­ர­மாக தீபா­வ­ளியை அவர் கொண்டா­டு­கிறார். ஓராண்டா­கக் காத­லித்த குமாரி ஃபெய் ஓங்கை சென்ற ஆண்டு மணந்தார் திரு விக்ரம் நாயர். கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் விக்ரம்-=ஃபெய் தம்ப­திக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஒரு வய­தா­கும் மகள் இந்­தி­ரா­வு­டன் தீபா­வ­ளியை வர­வேற்­கும் இவர்­களுக்கு இரு­ த­ரப்­புக் குடும்பத்­தா­ரு­டன் இனிய நாளைக் கழிப்­ப­தற்கான சிறந்த வாய்ப்­பாக இது அமை­கிறது.

பொதுவாக இவர் தீபா­வ­ளியை நண்­பர்­களு­ட­னும் செம்ப­வாங் குழுத்­தொ­குதி குடி­யி­ருப்­பா­ளர்­களு­ட­னும் கொண்டா­டு­வது வழக்­கம். அட்­மி­ரல்ட்டி வட்­டா­ரத்­தில் வசிக்­கும் இத்­தம்ப­தி­யி­னர், யீ‌ஷூனில் உள்ள புனி­த­ம­ரம் ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணி­யர் கோவி­லுக்­குச் சென்று வணங்கி இன்றைய தீபா­வ­ளிக் கொண்டாட்­டத்தைச் சிறப்­பாகத் தொடங்க­ உள்­ள­னர். சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரி­யம்­மன் கோவி­லுக்கு வழக்­க­மா­கச் செல்லும் திருமதி ஃபெய், இன்று புனி­த­ம­ரம் ஸ்ரீ பால­சுப்­பி­ரம­ணி­யர் கோவி­லுக்­குக் கண­வ­ரு­டன் செல்வது குறித்து உற்­சா­கத்­து­டன் இருக்­ கிறார்.

இவ்வார­ இ­று­தியில் மகள் இந்­தி­ரா­வின் முதல் பிறந்த­நாளைக் கொண்டா­டு­வது இந்தத் தம்ப­திக்கு மட்­டற்ற மகிழ்ச்­சியைத் தரு­கிறது. “இந்துக் கட­வுளைப் பிர­தி­ ப­லிக்­கும் விதத்­தில் எங்கள் மகளுக்கு இந்திரா என்று பெயர் சூட்­டி­னோம். இந்த மங்க­ள­க­ர­மான தரு­ணத்­தில் குழந்தை­யின் பிறந்த­நாளைக் கொண்டா­டு­வது ஆனந்தத்தைத் தரு­கிறது,” என்றார் திருமதி ஃபெய், 39. அத்­து­டன், தம் தந்தை­யின் பிறந்த­நாளை­யும் இன்று கொண்டா­டு­வ­தில் பூரிப்பு அடை­கிறார் திரு விக்ரம். இரு தரப்பைச் சேர்ந்த குடும்பத்­தா­ரும் மதிய உணவுக்காக உண­வ­கம் ஒன்றில் ஒன்­று­கூடத் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

தீபாவளி போன்ற விழாக்­ கா­லங்களில் அனை­வ­ரும் நேரம் ஒதுக்கி ஒன்­றிணைந்து அகம­கிழ முடி­வ­தாக இத்­தம்பதி கூறினர். திரு விக்­ர­மின் தாயா­ருடைய குடும்பத்­தி­னர் கிறிஸ்­துவ சம­யத்தைச் சேர்ந்த­வர்­கள். அவரது தந்தை­யா­ரின் குடும்பத்­தி­னர் இந்து சம­யத்­தி­னர். எனவே, இளமைப் பரு­வத்­தி­லி­ருந்தே தீபாவளி, கிறிஸ்­மஸ் பண்­டிகை­களை இவர் கொண்டா­டு­வது வழக்­கம். புதிய வரவான இந்­தி­ரா­வுக்கு இருதரப்பு குடும்பத்தாரின் ஆசியைப் பெற்றுத்தர விரும்பும் விக்ரம், ஃபெய் தம்ப­தி­யி­னர் இத்­தீ­பா­வ­ளியை முன்­னிட்டு குடும்ப ஒன்­று­கூ­டல் நிகழ்ச்­சியை­ மிகவும் ஆவ­லு­டன் எதிர்­பார்க்­கின்ற­னர்.

மகள் இந்திரா (வலது) கொண்டாடும் முதல் தீபாவளி இது என்பதாலும் தந்தையின் பிறந்தநாள் என்பதாலும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படும் திரு விக்ரம் நாயர், அவரது மனைவி ஃபெய் ஓங். படம்: திமத்தி டேவிட்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’

தேசிய மரபுடைமைக் கழகத்தின் நல்லிணக்க நடைப் பயணங்கள் தொடரில் நேற்று ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்கு வந்த வருகையாளர்களுக்கு அக்கோயிலின் அறங்காவலர் ப. சிவராமன் கோயிலின் வரலாறு பற்றியும் அங்குள்ள வழிபாட்டு நடைமுறைகளையும் விளக்குகிறார். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

ஏழு வழிபாட்டு இடங்களுக்கு நல்லிணக்க நடைப் பயணங்கள்

மெக்னல்லி லசால் வளாகத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், லசால் கலைக் கல்லூரியின் பீட்டர் சியா, ஸ்டீவ் டிக்சன், நீ ஆன் கொங்ஸியின் உதவி தலைவர் ரிச்சர்ட் லீ, நீ ஆன் கொங்ஸியின் தலைவர் ஜெமி டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Nov 2019

லசால் 12 மாடி கட்டடத்துக்கு $50 மி. நன்கொடை