தலைமைத்துவ பண்புகளில் சிறந்து விளங்கும் ஜான்

வில்சன் சைலஸ்

பொது சேவைத் துறையில் கால் பதிக்க விரும்பி சிங்கப்பூர் குடி யரசு ஆகாயப் படையில் சேர்ந்தவர் 30 வயது மேஜர் ஜான் நெகே மியா சேமுவல். கடந்த 11 ஆண்டுகளாக அங்கு சேவையாற்றி வரும் இவர், அவ்வப்போது கிடைக்கும் அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்குத் தம்மை மேம்படுத்தி வருகிறார்.

கோ கெங் சுவீ ஆயுதப் படை அதிகாரிகள் தலைமைத்துவ பயிற்சிக் கல்லூரி நடத்திய பயிற்சி வகுப்புகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று ஆகாயப் படை பிரிவுக்கான முதல் நிலை மாண வர் என்ற பெயரை ஆக அண்மை யில் பெற்றுள்ளார் மேஜர் ஜான். இஸ்தானாவில் நேற்று முன் தினம் நடைபெற்ற கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னிட மிருந்து விருது பெற்ற மேஜர் ஜான், சிறப்புரை ஆற்றி பயிற்சி யின்போது தமக்கு ஏற்பட்ட அனு பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

"தலைமைத்துவ பண்புகள், வெவ்வேறு சேவைகளின் முக்கி யத்துவம் போன்றவற்றை வகுப்பு களின் மூலம் கற்றுக்கொண்டேன். இத்துடன், பிற சகாக்களுடன் ஒற்றுமையாக செயல்படுவது எவ் வளவு முக்கியம் என்பதையும் உணர்ந்தேன்," என்றார் முன்னாள் போர்விமானத் தளபதியான இவர். சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் மீதுள்ள ஈர்ப்பால் தொடக்கக் கல்லூரிக்குப் பிறகு தேசிய சேவையில் சேர்ந்த மேஜர் ஜான், சிங்கப்பூர் ஆயுதப் படையின் உய ரிய உபகாரச் சம்பளத்தின் மூலம் தமது மேற்கல்வி பயிலும் கனவை நனவாக்கிக் கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!