பொங்கோலில் புது சைக்கிள் பாதை திறப்பு

பொங்கோலில் புதிய 8.8 கிலோ மீட்டர் நீளமான சைக்கிள் ஓட்டப் பாதைக் கட்டமைப்பு நேற்று திறக் கப்பட்டது. இதன் பயனாக பொங் கோலில் சைக்கிளோட்டிகள் இப் போது அந்தப் பாதையில் மிகவும் வசதியாகச் செல்லலாம். போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் இங் சீ மெங் அந்தப் பாதையை நேற்று திறந்து வைத் தார்.

புதிய பாதை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில்தான் திறக்கப்படவிருந்தது. ஆனால் முன்னதாகவே அது சேவைக்கு வந்துள்ளது. அந்தப் பாதையின் வழியாக சைக்கிளோட்டிகள் செங் காங் வரை செல்லலாம். தீவு வட்டப் பாதை கட்டி முடிக்கப்பட்டதும் சைக்கிளிலேயே பாசிர் ரிஸ், சாங்கி, ஈஸ்ட் கோஸ்ட் பார்க் வழியாக கிழக்குக் கரை யோரப் பூந்தோட்டங்கள் வரை செல்ல முடியும்.

சிங்கப்பூரை கார்கள் குறைந்த நாடாகவும் பசுமை நிறைந்த பயண வழிகளைக் கொண்டதாகவும் ஆக்குவது அரசாங்கத்தின் திட் டம். இத்திட்டத்தின் பகுதியாக செம்பவாங், தெம்பனிஸ், பாசிர் ரிஸ், யீ‌ஷூன், சாங்கி, தாமான் ஜூரோங் ஆகிய வட்டாரங்களில் ஏற்கெனவே சைக்கிளோட்ட வசதிகள் இருக்கின்றன. பொங்கோலை யும் சேர்த்து இந்த வசதியைக் கொண்டுள்ள மொத்த வட்டாரங் களின் எண்ணிக்கை ஏழாகிறது.

துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் (இடது) பொங்கோலில் புதிய பாதையில் சைக்கிள் ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். படம்: பெரித்தா ஹரியான்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!