மலேசியக் கடலில் அனுமதியின்றி முக்குளித்த இரு ஆடவர்கள் கைது

சிங்கப்பூரர் ஒருவரும் ஜெர்மானிய ஆடவர் ஒருவரும் சென்ற சனிக்கிழமை மாலை மலேசியாவுக்குச் சொந்தமான கடற்பகுதியில் அனுமதியின்றி முக்குளித்தற்காக மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூருக்குச் சொந்தமான பெட்ரா பிராங்கா தீவுக்கு அருகே உள்ள ‘மிடல் ராக்ஸ்’ பாறைக்கு அருகே அவர்கள் முக்குளித்தனர் என்று மலேசிய கரையோரக் காவல் படை நேற்று தெரிவித்தது.

49 வயது ஜோன் கொச்லொவிசும் 29 வயது முக்குளிப்புப் பயிற்றுவிப்பாளரான அஞ்சாஸ்மரா முகமது காலிட் என்ற சிங்கப்பூரரும் ஜோகூரில் உள்ள செடிலி எனும் இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இருவரும் தங்களின் முக்குளிப்பு நடவடிக்கையை ‘சவுத் லேச்’ பாறைக்கு அருகே தொடங்கியதாகவும்பின்னர் அவர்கள் ‘மிடல் ராக்ஸ்’ பாறைக்கு அருகே சென்றதாகவும் கூறினர். அது முக்குளிப்பதற்கு ஆபத்தான பகுதி. தற்போது அவர்களுக்கு சேவையாற்றிய முக்குளிப்பு நிறுவனத்துடனும் அவரவர் தூதரகங்களுடனும் விளக்கம் கேட்டிருப்பதாக மலேசியாவின் கடல்துறை அமலாக்க அமைப்பின் இயக்குனர் அகமது புஸி கஹார் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வீடுகளின் விலைகளைப் பார்க்கையில் அங் மோ கியோவில் நான்கறை வீட்டுக்கு மானியங்கள் தவிர்த்து $451,000 முதல் தொடங்குகிறது. அதேபோல தெம்பனிசில் ஐந்தறை வீட்டின் விலை மானியங்கள் தவிர்த்து $508,000 முதல் தொடங்குகிறது.

20 Nov 2019

பெரிய வீடுகளுக்கு மிதமிஞ்சிய வரவேற்பு

50 கிலோ எடையுள்ள இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு நேற்று முன்தினம் 11 மணி நேர நடவடிக்கைக்குப் பின் அந்த இடத்திலேயே செயலிழக்கச் செய்யப்பட்டது. படம்: சிங்கப்பூர் ராணுவம்

20 Nov 2019

11 மணி நேர நடவடிக்கைக்குப் பின் செயலிழந்த வெடிகுண்டு