அடுத்த ஆண்டில் பார்சல் பெட்டகமுறை அமலாகும்

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முடிவில் நாடளாவிய முறையில் பார்சல் பொருட்களைப் பட்டுவாடா செய்யும் பெட்டக முறை அமலாக விருக்கிறது. இணையம் வழி பொருட்களை வாங்குவது இதன் மூலம் இன்னும் வசதியானதாக ஆகும். இந்தப் பட்டுவாடா பெட்டக முறைக்கான யோசனைகளை அரசாங்கம் இப்போது ஆராய்ந்து வருகிறது என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் நேற்று தெரிவித்தார். இத்தகைய பெட்டக முறை பற்றி திரு தர்மன் இந்த ஆண்டு ஏப்ரலில் முதன்முத லாக அறிவித்தார்.

உள்நாட்டு தளவாடப் போக்கு வரத்துத் துறையில் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் அஞ்சல் வழி பொருட்களை மிகவும் வசதி யாகவும் வேகமாகவும் கொண்டு சேர்க்கவும் இடம்பெறும் முயற்சி களின் ஒரு பகுதியாக இந்தப் பெட்டக முறை அமலாகிறது. திரு தர்மன் நேற்று தெம்பனி சில் சிங்போஸ்ட் நிறுவனத்தின் வட்டார இணைய வர்த்தகத் தள வாடப் போக்குவரத்து மையத்தை திறந்துவைத்து உரையாற்றினார். அஞ்சல் வழி பொருட்களைப் பட்டுவாடா செய்யும் முறையை இன்னும் ஆற்றல்மிக்கதாக ஆக் கும் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் புதிதாக பல நடவடிக் கைகள் இடம்பெற இருப்பதாகவும் அவற்றில் இந்தப் பெட்டக முறை ஒன்று என்றும் திரு தர்மன் குறிப் பிட்டார்.

பட்டுவாடா செய்யவேண்டிய பொருட்களை எல்லாம் கடைத் தொகுதிகளில் ஒன்று திரட்டி அதன்மூலம் சாலைகளில் பட்டு வாடா வாகனங்களின் எண்ணிக் கையைக் குறைப்பது மற்றொரு நடவடிக்கை என்றார் துணைப் பிரதமர். உச்ச நேரங்களில் சாலைகளில் மூன்றில் ஒரு பங்கு இடத்தைச் சரக்கு வாகனங்களே எடுத்துக் கொள்கின்றன என்பதை திரு தர்மன் சுட்டிக்காட்டினார்.

உச்ச நேரங்களில் இத்தகைய வாகனங்களின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளில் 20 முதல் 30% வரை குறைப்பது இலக்கு என்றார் திரு தர்மன். இதற்கிடையே, சிங்போஸ்ட் நிறுவனத்தின் புதிய புத்தாக்க நிலையம் நேற்று தொடங்கிவைக் கப்பட்டது. பொருளியல் வளர்ச் சிக் கழகத்தின் உதவியுடன் சென்ற ஆண்டு ஆகஸ்டில் இந்த நிலையம் அமைக்கப்பட்டது. அஞ்சல் பட்டுவாடாக்களில் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்து வது புதிய தொழில்நுட்பங்களில் ஒன்றாக இருக்கும்.

சிங்கப்பூர் போஸ்ட் நிறுவனத் தின் பெட்டக முறையில் வாடிக்கை யாளர்கள் 24 மணி நேரமும் பார்சல் களைப் பெற்றுக் கொள்ள லாம். கோப்புப் படம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்

மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்

19 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை