தீபாவளி காலத்தின்போது மாட்டிறைச்சி சலுகை: ‘கோல்ட் ஸ்டோரெஜ்’ மன்னிப்பு

தீபாவளி காலத்தின்போது தனது பேரங்காடி ஒன்றில் மாட்டிறைச்சி சலுகையை விளம்பரப்படுத்தியதற்காக ‘கோல்ட் ஸ்டோரெஜ்’ நிறுவனம் நேற்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. அது இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தியிருக்கலாம் என்று அது தனது அறிக்கையில் கூறியது. அந்தச் சலுகை பற்றிய படத்தைக் கடந்த திங்கட்கிழமையன்று டுவிட்டிரில் வாசகர் ஒருவர் பதிவேற்றம் செய்தார். கலாசார உணர்வுகளைப் பாதிக்கும் செயல் என்று அறியாமல் தனது இளைய விற்பனை ஊழியர் ஒருவர் அந்தச் சலு கையை இடம்பெறச் செய்தார் என்று கோல்ட் ஸ்டோரெஜ் நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.

“அந்தச் சலுகையை உடனே அகற்றி அதன் தொடர்பில் அந்த ஊழியருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். இந்துக் களின் உணர்வுகளைப் பாதிக்கும் வண்ணம் நாங்கள்அதைச் செய்யவில்லை. தீபாவளி கொண்டாடும் இந்துக்கள் அனை வரிடமும் இது குறித்து நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள் கிறாம்,” என்று ‘கோல்ட் ஸ்டோரெஜ்’ நிறுவனம் கூறியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டெம்பனிஸ் சென்ட்ரல் 7, புளோக் 524 ஏக்கு நீலநிற மறுபயனீட்டுத் தொட்டியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

மறுபயனீடு எளிதாகிறது