சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்த பேருந்து ஓட்டுநருக்கு சிறை, தடை

சாலையில் கவனக்குறைவாக பேருந்து ஓட்டிய காரணத்தால் முதிய சைக்கிளோட்டி ஒருவருக்கு மரணத்தை விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் போ டெக் கெங் எனும் 59 வயது பேருந்து ஓட்டுநருக்கு 15 நாள் சிறையும் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டத் தடையும் தண்டனையாக நேற்று விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி திரு போ, தனது 196 சேவை எண் பேருந்தை மரின் கிரசெண்ட், மரின் பரேட் ரோடு சந்திப்பில் செலுத்திக் கொண்டிருந்தபோது, இடப்பக்கம் திரும்புகையில் வலதுபுறம் பார்த்தாரே தவிர, இடப்பக்கம் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்று கொண் டிருந்த 87 வயது ஆர்டி டானைக் கவனிக்க தவறினர்.

பேருந்து டானின் மீது மோதியதால் அந்த முதியவர் படுகாயம் அடைந்து, பின்னர் மருத்துவமனையில் மரணமுற் றார். ஆர்டி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தில் கடந்த 35 ஆண்டுகளாகப் பணி யாற்றிய திரு போ வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது இரவு நேரக் காவலாளியாக வேலை செய்கிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ