1எம்டிபி-யுடன் தொழில் நடத்த நிதிநிறுவனம் அமைப்பது பற்றி இயோ அறிந்திருந்தார்

சுவிஸ் தனியார் வங்கியான பிஎஸ்ஐ வங்கியிலிருந்து வெளி யேறி, மலேசியாவின் 1எம்டிபி அரசு நிதிக்கு முற்றிலும் சொந்த மான பிரேஸன் ஸ்கை நிறுவனத் துடன் செயல்படும் நிதி நிறுவ னத்தை அமைத்து ஏகப்பட்ட பரிந் துரைப்புக் கட்டணம் சம்பாதிக்கும் யோசனை தன்னுடையதே என்று முன்னாள் பிஎஸ்ஐ வங்கியாளர் இயோ ஜியாவெய்=யின் முன்னாள் மேலதிகாரி நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். "யோசனை என்னிடமிருந்து வந்திருக்கலாம், ஆனால் இந்த யோசனைக்கு இயோ தீவிர ஆதர வளித்ததோடு, இதுபற்றிய பேச்சு வார்த்தையிலும் ஈடுபாட்டுடன் பங் கெடுத்தார்," என்று வழக்கின் மூன்றாம் நாள் விசாரணையின் போது திரு கெவின் சுவாம்பிள்ளை கூறினார். அரசுத் தரப்புச் சாட்சி யாக சாட்சியமளித்த பிஎஸ்ஐ வங்கியின் முன்னாள் சொத்து நிர்வாகச் சேவைப் பிரி வின் தலைவர் திரு சுவாம்பிள் ளையை இயோவின் வழக்கறிஞர் பிலிப் ஃபொங் குறுக்கு விசா ரணை செய்தார்.

நிதி நிர்வாகத் தொழில் தொடங்கும் யோசனையை அவர் இயோவுக்குக் கொடுத்தாரா என்று வழக்கறிஞர் பிலிப் ஃபொங் கேட்டார். "நிதி நிறுவனம் US$2.3 பில்லியனுக்கு (S$3.2 பில்லியன்) மேலான முதலீடுகளை நிர்வகிக் கும். இதை நீங்கள் இயோவிடம் சொன்னீர்களா," என்று திரு ஃபொங் கேட்டார். ஆனால் சுவாம் பிள்ளை இதை மறுத்தார். தான் எதுவும் சொல்லாமலேயே "அந்தத் தொழில் லாபகரமானதாக இருக் கும் என்பதை இயோ அறிந்திருந் தார்," என்றார் அவர். காவல்துறையினரிடம் பொய் சொல்லும்படியும் ஆதாரத்தை அழிக்கும்படியும் சாட்சிகளிடம் கூறி நீதிக்கு இடையூறு ஏற்படுத் தியதாக 33 வயது இயோ மீதான நான்கு குற்றச்சாட்டுகள் நீதிமன் றத்தில் விசாரிக்கப்படுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!