தொடர் கல்வி, திறன் மேம்பாட்டுக்கு புதிய திட்டம்

அதி­க­மான துறைகள் தங்களை மாற்­றி­யமைத்து வரும் வேளையில், ஊழி­யர்­களும் தகுந்த திறன், பயிற்­சி­களைப் பெற வேண்­டி­யுள்­ளது. இதில், திறன் பெற்ற ஊழி­ய­ர­ணியை உரு­வாக்­கு­வ­தில் முக்கிய பங்காற்­றும் பெரியோர் கல்­வித்­துறை­யும் மேம்பாடு காண வேண்­டி­யுள்­ளது. மாறி வரும் பொரு­ளி­யல், தொழில்­துறை­களுக்கு ஏற்ப பெரியோர் கல்வித் துறை தொடர்ந்து செயல்­பட வேண்டும் என்று கல்வி அமைச்­சர் (உயர் கல்வி, திறன்கள்) ஓங் யி காங் கூறி­யுள்­ளார். இதன் அடிப்­படை­யில், சிங்கப்­பூ­ரி­லுள்ள தொடர் கல்வி, பயிற்சி முறை­களின் தரத்தை மேம்படுத்தி, புதுப்­பிக்­கும் நோக்கில் ஐந்து ஆண்டு கால புதுப்­பிப்­புத் திட்டம் நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

வேகமாக மாறி வரும் புதிய பொரு­ளி­ய­லுக்­குத் தேவைப்­படும் திறன்களை உரு­வாக்­கும் வகை யில் பயிற்சி, பெரியோர் கல்வித் துறையின் புதுப்­பிப்­புத் திட்டம் எனும் அத்­திட்­டம் தேசிய ஸ்கில்ஸ்­ஃ­பியூச்­சர் இயக்­கத்­தின் கீழ் வகுக்கப்­பட்­டுள்­ளது. பெரியோர் கல்வித் துறையில் தற்போது கிட்­டத்­தட்ட 6,000 பெரி யோர் கல்­வி­யா­ளர்­களும் பாடத்திட்ட உரு­வாக்­கு­நர்­களும் உள்­ள­னர். பயிற்சி, பெரியோர் கல்வித் திறன் மன்றம், 150க்கும் மேற்­பட்ட நிபு­ணர்­களு­டன் ஆலோசனை நடத்தி உரு­வாக்­கி­யுள்ள இந்தத் திட்­டத்தை அமைச்­சர் ஓங், நேற்று மரினா பே சேண்ட்­சில் தொடங்­கிய பெரியோர் கல்வி மாநாட்­டில் அறி­வித்­தார்.

"வெறுமனே விரிவுரை ஆற்­று­வ­தும், குறிப்­பு­களைத் திரையில் காட்­டு­வ­தும் பயிற்சி அல்ல. பயிற்சி பெறு­வோ­ரின் கன­வு­கள், நம்­பிக்கை­கள், அவர்­களிடையே உள்ள கவலை­களை அறிந்து அவர்­களை மேம்படுத்த உத­வு­வது. அவர்­க­ளது திறன்களை மேம்படுத்தி, அவர்­க­ளது செயல்­தி­றனை மேல்­நிலைக்­குக் கொண்டு செல்ல வேண்டும்," என்றார் அமைச்­சர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!