சிறப்பு உதவி பிள்ளைக்கும் 2019 முதல் கட்டாயக் கல்வி

சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கு 2019 முதல் கட்டாயக் கல்வி அமலாகிறது. மிதமானது முதல் அதிகமான அளவுக்கு சிறப்பு உதவி தேவைப் படும் பிள்ளைகள் மற்ற பிள்ளை களைப்போல அரசாங்க உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து பயிலவேண்டும். கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் நேற்று இந்தப் புதிய கொள்கையைப் பற்றி அறிவித்தார். அரசாங்க உதவிபெறும் சிறப்புக் கல்விப் பள்ளிக்கூடங்களின் வரு டாந்திர மாநாடு நேற்று நடந்தது. அதில் உரையாற்றிய அமைச்சர், இந்தப் புதிய நடவடிக்கை சிங்கப்பூரில் எல்லாரையும் உள்ள டக்கும் வகையில் இடம்பெறும் தேசிய திட்டத்தில் முக்கியமான ஒரு மைல் கல் என்று குறிப்பிட் டார்.

சிறப்பு உதவி தேவைப்படும் எல்லா பிள்ளைகளும் அரசாங்க நிதி உதவிபெறும் பள்ளிகளில் முறையான கல்வியைப் பெறுகிறார் கள் என்பது மகிழ்ச்சியாக இருக் கிறது என்றார் அமைச்சர். சிறப்பு உதவி பள்ளிக்கூடங் களில் பாடத்திட்டங்கள், போதனை, கற்றல், ஆசிரியர்களுக்கான நிபுணத்துவ மேம்பாடு, அடிப்படை வசதிகள் ஆகிய துறைகளில் இடம்பெற்று வரும் மேம்பாடுகளை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங், லோக்னாரோ‌ஷினி என்ற 11 வயது மாணவியுடன் சேர்ந்து விமானத்தை வரைகிறார். யீ‌ஷூன் பார்க் பள்ளிப் பேராளர் திருவாட்டி ஷெரிஃபா எம் யோக்கோயாமா (இடது) உடன் இருக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

20 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

போதையில் இருந்த கருணாகரன் எதையோ உளறிவிட்டு மதுபானக்கூடத்தின் மேல் மாடிக்குச் சென்றார். படம்: INCE

20 Nov 2019

மதுக்கூடத்தில் 3 பெண்களை மானபங்கம் செய்த வழக்கறிஞருக்கு $15,000 அபராதம்

முகம்மது ஃபாரிட் முகம்மது சாலே மீது துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில் கார்பரல் கோக்கை 12 மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் தள்ள 34 வயது சார்ஜென்ட் முகம்மது நூர் ஃபட்வா மஹ்முட் என்ற அதிகாரியைத் தூண்டிய குற்றம் கடந்த மாதம் நிரூபிக்கப்பட்டது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Nov 2019

தேசிய சேவையாளர் மரணம்: முதல் வாரண்ட் அதிகாரிக்கு 13 மாதச் சிறை