இந்திராணி: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பன்முனை முயற்சி

சுதாஸகி ராமன்

சிங்கப்பூரில் இந்தியர்களிடையே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பன்முனை முயற்சியை மேற்கொள் வது அவசியம் என்று சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்தி ராணி ராஜா கூறியுள்ளார். வீடுகளுக்குச் சென்று மக்களை நேரடியாக சந்தித்தல், பள்ளிகளில் சிறுவர்கள் மூலமாக பெரியவர்களுக்கு எடுத்துரைத்தல், வழிபாட்டு இடங்களில் தகவல் களைப் பரப்புதல் போன்றவற்றின் வழியாக நீரிழிவு நோயை சமாளிப்பதன் வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை முதியோரி டையே ஏற்படுத்தலாம் என அமைச்சர் விவரித்தார்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத் துவது பற்றிய பரிந்துரைகளையும் கருத்துகளையும் பலதரப்பட்ட சிங்கப்பூரர்களிடமிருந்து திரட்டும் நோக்கில் சுகாதார அமைச்சும், சுகாதார மேம்பாட்டு வாரியமும் ஒன்றிணைந்து நீரிழிவு தடுப்பு பராமரிப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளன. அவ்வகையில் இந்திய சமூகத்தினரிடமிருந்து நீரிழிவு நோயைப் பற்றிக் கண்டறிய அப்பணிக்குழு நேற்று ஏற்பாடு செய்த பொது கருத்தெடுப்புக் கலந்துரையாடலில் அமைச்சர் இந்திராணி பங்கேற்றார்.

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நீரிழிவு நோய் பற்றி நேற்று நடந்த கலந்துரை யாடலில் பங்கேற்றவர் களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார் மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா (இடது). படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!