உயிரைக்காக்க உலகெங்கும் சென்றுவரும் குணாளன்

ப. பாலசுப்பிரமணியம்

எலும்பு மஜ்ஜை தானமாகக் கிடைக்குமா, கிடைக்காதா? அப்படி கிடைத்தாலும் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடியுமா என்று இரு நண்பர்களின் அவலநிலையை நேரில் கண்டவர் திரு குணாளன் துரைசிங்கம். அவர்களில் ஒருவர் மறைந்து விட்டார். மற்றொருவர் வெற்றிகர மாக எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை மேற்கொண்டு சீரான நிலையில் வாழ்ந்து வருகிறார். இந்த அனுபவங்களால் சுமார் 19 ஆண்டுகளுக்கு முன், எலும்பு மஜ்ஜை தானத் திட்டத்தில் குணாளன் சேர்ந்தார். இதற்கு மேலாக எலும்பு மஜ்ஜை தானத் திட்ட அமைப்பில் ஒரு தொண்டூ ழியராக சேர்ந்து அவர்களது நிதி திரட்டு, விழிப்புணர்வு நடவடிக்கை களிலும் இவர் ஈடுபடத் தொடங்கி னார்.

சில சமயங்களில் ரத்தம் தொடர்பான நோய்களுக்கு உள் ளாகியவர்கள் பிழைக்க, மாற்று எலும்பு மஜ்ஜை தேவைப்படலாம். மூன்றில் ஒரு நோயாளிக்கும் குறைவானவருக்கே உடன்பிறப்பு களின் எலும்பு மஜ்ஜை பொருந்தும். குடும்பத்தினர் அல்லாத ஒரு வருக்கு பொருந்தக்கூடிய எலும்பு மஜ்ஜையைத் தானமாக வழங்கு பவரைத் தேடிப்பிடிப்பதற்கான சாத் தியக்கூறு 20,000ல் ஒன்று.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!