மரம் நடும் விழாவில் பூங்கா திறப்பு

1971ல் சிங்கப்பூரின் முதல் பிரதமர் அமரர் லீ குவான் இயூவால் தஞ் சோங் பகாரில் தொடங்கப்பட்ட மரம் நடும் விழா இந்த ஆண்டு தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அதனை முன் னிட்டு தஞ்சோங் பகார் குழுத் தொகுதியில் நேற்று 46 மரக்கன்று கள் நடப்பட்டன. மேலும் குவீன்ஸ்டவுன் தொகு தியில் ஆறு மாத மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு நேற்று லெங் கீ பூங்காவைப் பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங்கும் அத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப் பினர் டாக்டர் சியா ‌ஷி-லூவும் திறந்து வைத்தனர்.

தஞ்சோங் பகார் குழுத் தொகுதிக்கு உட்பட்ட குவீன்ஸ்டவுன் தொகுதியில் லெங் கீ பூங்கா திறக்கப்பட்டது குறித்து தமது வாழ்த்தை அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சியா ‌ஷி-லூவிடம் தெரிவிக்கிறார் பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் (நடுவில்). உடன் தஞ்சோங் பகார் குழுத் தொகுதியின் இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் (இடமிருந்து இரண்டாவதிலிருந்து) சேம் டான், ஜோன் பிரேரா, மெல்வின் யோங், இந்திராணி ராஜா. படம்: மக்கள் கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!