பணமில்லாமல் பொருட்கள் வாங்க மாணவருக்கு வசதி

ப. பாலசுப்பிரமணியம்

தொடக்கப்பள்ளி பிள்ளைகளின் கைச்செலவுத் தொகையை எளி தாகக் கையாள ஒரு புதிய திட் டத்தைத் தொடங்கியுள்ளது பிஓஎஸ்பி வங்கி. பெற்றோர், தொடக்கப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக ‘பிஓஎஸ்பி ஸ்மார்ட் படீ’ (POSB smart buddy) என்ற திட்டத்தை வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் வழி, மாண வர் சலுகை அட்டை அல்லது ‘பிஓஎஸ்பி’ கடிகாரத்தைக் கொண்டு மாணவர்கள் பள்ளியில் தங்களுக்குத் தேவையான பொருட் களை வாங்கிக்கொள்ளலாம்.

சலுகை அட்டை, கடிகாரத்தைப் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்கள் பள்ளிகளில் அமைக்கப்படும். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள கைத்தொலைபேசிச் செயலி வழி பெற்றோர் தங்கள் பிள்ளையின் செலவுகளையும் சேமிப்புகளையும் உடனுக்குடன் கண்காணிக்க முடியும். என்ன வாங்குகிறார்கள் என்பதையும் அறியலாம்.

‘பிஓஎஸ்பி’ கடிகாரத்தைக் கொண்டு தொடு உணர் கருவியில் ‘ஸ்கேன்’ செய்யும் சிறுமி. ஒரு பொருளை வாங்கிய பிறகு மீதியுள்ள, கைச்செலவுத் தொகையை தொடுஉணர் கருவியின் திரை காட்டும். படம்: ‘பிஓஎஸ்பி’ வங்கி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ