மனித வள அமைச்சர் லிம்: நியாயமற்ற ஆட்குறைப்பு அதிகரிப்பதை மெய்ப்பிக்க தெளிவான சாட்சியமில்லை

சிங்கப்பூரில் ஆட்குறைப்புகள் அதிகரித்தாலும் நியாயமற்ற, பொறுப்பற்ற ஆட்குறைப்புகள் அதிகரித்து வருகின்றன என்பதை மெய்ப்பிக்க தெள்ளத்தெளிவான சாட்சியம் இல்லை என்று மனித வள அமைச்சர் லிம் சுவீ சே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஆட்குறைப்பு தொடர்பான மொத்தம் 63 ஊழியர்கள் விவகாரங்களில் 14 மேல்முறையீடு களை மனிதவள அமைச்சு கையாண்டது. அந்த ஊழியர்கள் தாங்கள் நியாயமற்ற முறையில் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தங்களுக்கு ஆட்குறைப்பு இழப்பீடு எதுவும் கொடுக்கப்பட வில்லை என்றும் கருதினார்கள்.

சென்ற ஆண்டில் 94 விவ காரங்களில் 15 மேல்முறையீடுகளை அமைச்சு கையாண்டது. மொத்தமாகப் பார்க்கையில் 2015 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டில் இதுவரையிலும் ஆட் குறைப்புக்கு ஆளான மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் இது மிகவும் குறைவு என்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அளித்த பதிலில் அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!