வேலையில் சேர்ந்து 5 ஆண்டுக்குள் விலகிய ஆசிரியர்கள் விகிதம் 5%

சிங்கப்பூரில் ஆசிரியர் வேலையி லிருந்து விலகுவோரின் விகிதாச் சாரம் தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் அந்த வேலையில் புதிதாக சேர்ந்த முதல் ஐந்தாண்டுகளுக்குள் வேலையைவிட்டு விலகியோரின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று நேற்று நாடாளுமன்றத்தில் தெரி விக்கப்பட்டது. ஆசிரியர் வேலையிலிருந்து விலகுவோரின் ஒட்டுமொத்த விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஏறக்குறைய 2 முதல் 3% வரை குறைவாகவே இருந்து வருகிறது என்று கல்வித் துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி மன்றத்தில் தெரிவித்தார். ஆனால் ஆசிரியர் வேலையில் சேர்ந்து ஐந்து ஆண்டு காலத்திற் குள் அந்தப் பதவியைவிட்டு போனவர்கள் ஏறக்குறைய 5% என்றார் அவர்.

இந்த வேலையி லிருந்து பலரும் விலகியதற்கு காரணம் குழந்தைப் பராமரிப்பு, வேறு வேலைக்கு போகவேண்டும் என்ற எண்ணம் போன்றவையே தவிர வேலைச் சுமை ஒரு பொது வான காரணமாகத் தெரிவிக்கப் படுவதில்லை என்றார் அவர்.

ஆசிரியர் வேலையிலிருந்து விலகுவோரின் விகிதம் தொடர்ந்து குறைவாகவே இருந்து வரும்போதிலும் அந்த வேலையில் புதிதாக சேர்ந்து முதல் ஐந்தாண்டுகளுக்குள் விலகியோரின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. படம்: ஸ்டரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது