தீ குறித்து குடியிருப்பாளர்களுக்குத் தெரிவித்தவருக்குப் பாராட்டு

லெங்கோக் பாரு, புளோக் 59ன் மூன்றாவது மாடி மின்தூக்கித் தளத்தில் பிடித்த ஏற்பட்ட தீ குறித்து குடியிருப்பாளர்களுக் குத் தெரிவித்தவருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவித்துள்ளன. தமது பிள்ளையைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த சுஹைனி முகமது அலி எனும் ஃபேஸ்புக் பயனாளர் அச்சம்பவத்தை நேரடியாகப் பார்த்தார்.

புளோக்குக்கு அருகில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் இருந்த நீல நிறச் சட்டை அணிந்திருந்த அந்த ஆடவர் உடனே புளோக் கின் மூன்றாவது மாடிக்குச் சென்று அங்குள்ள குடியிருப்பாளர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டி தீ குறித்து எச்சரித்தார். தீயை அணைக்க அவர் மற்றவர்களைத் தண்ணீர் கொண்டு வரும்படியும் கேட்டுக்கொண்டார். "இதுதான் கிராமத்து உணர்வுக்குச் சிறந்த உதாரணம்," என்று சுஹைமி ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!