‘சிஒஇ’ கட்டணங்கள் ஏற்ற இறக்கம்

நவம்பர் மாத வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான (சிஓஇ) முதலாவது ஏலக் குத்தகையில், கட்டணங்கள் ஏற்ற இறக்கமாக இருந்தன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது 1,600 சிசிக்கு உட்பட்ட சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம், $50,991லிருந்து உயர்ந்து $52,668 ஆனது. 1,600 சிசிக்கு மேற்பட்ட பெரிய கார்களுக்கான சிஓஇ கட்டணம், $56,410லிருந்து $56,206க்கு குறைந்தது.

சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கான வர்த்தக வாகனப் பிரிவில் சான்றிதழ் கட்டணம் $45,589லிருந்து உயர்ந்து $48,001 ஆனது. பொதுப் பிரிவு வாகனங்களுக்கான சான்றிதழ் கட்டணம் $56,340லிருந்து $56,000 என்று குறைந்தது. மோட்டார் சைக்கிள்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம், $6,354 லிருந்து $43 குறைந்து $6,311 எனப் பதிவானது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது