சிங்கப்பூரிலுள்ள வங்கிகளில் மாற்ற முடியாது

இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் சிங்கப்பூரில் இந்திய ரூபாய்களை அதிகளவில் கைவசம் வைத்திருக்கும் சிங்கப்பூர் நாணய மாற்றுத் தொழிலர்கள் செய்வதறியாது கூடுதல் தகவல்களுக்காக காத்திருக்கின்றனர். ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி இருக்கிறது என்றும் சிங்கப்பூரில் உள்ள வங்கிகளால் இச்சூழலில் தற்போது உதவ இயலாது என்றும் சிங்கப்பூரில் செயல்படும் இந்திய வங்கிகள் தெரிவித்தன.

இந்திய ரூபாய்களை வைத்துள்ளவர்கள் இந்தியாவிற்கு செல்லும்போது அங்குள்ள வங்கிகளில் பணத்தை மாற்றலாம் என்றது 'ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா' வங்கி. முஸ்தஃபா சென்டரின் பண மாற்றம் செய்யும் பிரிவில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் திரு ஜமாலுன் நசிர், "நாள் ஒன்றுக்குச் சுமார் 2 மில்லியன் இந்திய ரூபாய் வரை பண மாற்றம் செய்கிறோம். தற்போது இருப்பில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றப்போகிறோம் என்று தெரியவில்லை," என்றார். கூடிய விரைவில் இதற்குத் தீர்வு வரும் என அவர் எதிர்பார்க்கிறார்.

நேற்றுக் காலையுடன் இந்திய ரூபாய்கள் மாற்றுவதை நிறுத் திவிட்டதாக சொன்ன ஸ்டெர்லிங் எக்ஸ்சேஞ் நிலையத்தின் உரிமையாளர் திரு சையது முபாரக், வாடிக்கையாளர்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். "இந்தியாவி லிருந்து திரும்பிய வாடிக்கையாளர் ஒருவர், கைவசம் இருந்த இந்திய ரூபாயை சிங்கப்பூர் பணமாக மாற்ற வந்து ஏமாற்றத்துடன் திரும்பினார்," என்றார் திரு முபாரக். - வில்சன் சைலஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!