துணிதுவைத்துக் கொண்டிருந்தபோது தீப் பற்றி எரிந்த ‘சம்சுங்’ சலவை இயந்திரம்

துணிதுவைத்துக் கொண்டிருந்த போது 'சம்சுங்' சலவை இயந்திரம் ஒன்று நேற்று முன்தினம் தீ பற்றிக்கொண்டது. சம்பவத்தில் இயந்திரம் முழுதாக எரிந்து போனது. சலவை இயந்திரம் இருந்த கழிவறையும் தீயினால் சேதம் அடைந்தது. நல்லவேளையாக சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்பட வில்லை.

புக்கிட் பாஞ்சாங், சேகார் ரோடு, புளோக் 469ல் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நண் பகலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ‌ஷின் மின் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது 42 வயது தாயாரும் 16 வயது மகளும் வீட்டில் இருந்தனர். தாயார், சமை யலறையில் இருக்கும் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த சலவை இயந் திரத்தை இயங்கச் செய்துவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றார். சிறிது நேரத்தில் வழக்கத்திற்கு மாறான வாசனை வருவதை உணர்ந்த அவர் வந்து பார்த்தபோது சலவை இயந்திரம் தீப் பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனே அவர் மகளை அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடினார்.

செயல்பட்டுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தீயில் முழுமையாக எரிந்து கருகிப் போன 'சம்சுங்' சலவை இயந்திரம். தீக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப் படுகிறது. படம்: ‌ஷின்மின் நாளிதழ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!