சிங்கப்பூர் அதன் சொந்த நலனின் அடிப்படையில் கொள்கைகளை வகுக்கவேண்டும் - தற்காப்பு அமைச்சர்

மற்ற நாடுகளின் கணிப்புகள் அல்லது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் அரசுரிமையுள்ள சுதந்திர நாடாக சிங்கப்பூர் கடைப்பிடிக்கும் தற்காப்பு, வெளி யுறவுக் கொள்கை, சிங்கப்பூர் நீடித்து நிலைக்கவும் வளர்ச்சிய டையவும் ஆகச்சிறந்த நிலையில் இருப்பதையே தொடர்ந்து அடிப் படையாகக் கொண்டிருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று நாடாளுமன்றத் தில் கூறினார். "சிங்கப்பூர் அதன் சொந்த நலனின் அடிப்படையில் கொள்கை களை வகுக்கவேண்டும். மற்ற நாடுகள் செய்வதையும் அவற்றின் வெளியுறவுக் கொள்கைகளையும் நாம் கவனிக்கவேண்டும் என்பது கண்கூடானது.

"சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு என்பதால் நமது வட்டாரத்தில் அமைதியையும் நிலைத்தன்மை யையும் நிலைநாட்ட விரும்புவோரு டன் நாங்கள் செயல்படுவோம்," என்றார் அவர். இந்தக் காரணத்தால்தான் மற்ற நாடுகளுடன் கூட்டு ஒத்து ழைப்பு நடவடிக்கைகளும் பயிற்சி களும் நடத்தப்படுகின்றன என்று அமைச்சர் இங் கூறினார்.

மிதக்கும் படகுகளில் புருணை, தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிறப்புப் படையினர் 'கடத்தப்பட்ட' வர்த்தகக் கப்பல் 'எம்வி அவதாரை' நெருங்குகின்றனர். கோப்புப் படம்: தற்காப்பு அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!