ஆணையம் பரிசீலனை: பேருந்துகளில் தானியங்கி சக்கரநாற்காலி படி

சக்கரநாற்காலியுடன் பேருந்து பயணம் செய்வோருக்கும் முதியோருக்கும் வசதியாக பேருந்துகளில் தானியக்க படி பொருத்தப்படக்கூடும். இப்போது இந்த நடைமுறை அமலில் இல்லை. சிங்கப்பூரில் கடந்த மாத நிலவரப்படி சாலைகளில் ஓடுகின்ற 5,330 பொதுப் பேருந்துகளில் சுமார் 91% வாகனங்களில் சக்கரநாற்காலியுடன் பயணம் செய்வோ ருக்குப் பேருந்து ஓட்டுநர்தான் உதவ வேண்டும். இப்படி பேருந்து ஓட்டுநர் செய்வதற்குப் பதிலாக இனிமேல் தானியங்கி படியைப் பொருத்துவது முடியுமா என்பது பற்றி நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இதன் தொடர்பில் ‘சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் கைனெடிக்’ நிறுவனத்துடன் ஆணையம் பேச்சு நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டெம்பனிஸ் சென்ட்ரல் 7, புளோக் 524 ஏக்கு நீலநிற மறுபயனீட்டுத் தொட்டியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

மறுபயனீடு எளிதாகிறது