முதியோரை ‘சாலைத் திறனாளராக’ மாற்ற புதிய சோதனைத் தொகுப்பு

சாலையைக் கடக்கும்போது, பார்வை ஓரத்திலிருக்கும் குழியை அல்லது தூரத்தில் வரும் பேருந்து சேவையின் எண்ணை நீங்கள் கவனிக்கக்கூடிய சாத்தியம் என்ன?

சாலையைப் பயன்படுத்தும் முதியோரிடையில் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி சாலை பாது காப்பு விழிப்புணர்வை உயர்த்த புதிய சோதனைத் தொகுப்பைப் போக்குவரத்து போலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அண்மை ஆண்டுகளில் வயதான பாதசாரிகள் அதிக விபத்துகளில் சிக்கியதைத் தொடர்ந்து, அவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை உயர்த்த நேற்று புதிய சோதனைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இவ்வாண்டின் முற்பாதியில், 122 முதியோர் விபத்தில் சிக்கி னார்கள். அவர்களில் 12 பேர் உயிரிழந்தனர்.

நேற்று நடைபெற்ற அனைத்து வயதினருக்குமான பிடோக் சமூக தினத்தில் முதியோருக்கான சாலைத் திறனாளர் சோதனையை முதியவர் ஒருவர் செய்து பார்க்கிறார். படம்: சாவ் பாவ்