பொங்கோல் ரெசர்வாரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘அப்பி-அப்பி புத்தே’ மரக்கன்றுகள்

அங் மோ கியோ, செங்காங் வெஸ்ட் ஆகிய தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியிருப்பாளர் களுடன் சேர்ந்து பொங்கோல் ரெசர்வாரில் நேற்று காலை ‘அப்பி-அப்பி புத்தே’ மரத்தின் கன்றுகளை நட்டு அவற்றுக்கு நீர் பாய்ச்சி மகிழ்ந்தார் பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்). இத்தகைய மரங்களின் வேர்கள் தண்ணீருக்குள் அமிந்து ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்ளக்கூடியவை. மேலும், இம்மரங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக, நீர்ப்பாசிகளை அழித்து நீரின் தரத்தை மேம்படுத்தவல்லனவாக உள்ளன. இத்தகைய மரங்கள் வெளிநாடுகளில் வளர்க்கப்பட்டாலும் சிங்கப்பூரில் முதன்முறையாக நடப் படுவதாக செங்காங் வெஸ்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லாம் பின் மின் கூறினார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம், சிங்கப்பூர் தேசிய தண்ணீர் முகவை, தேசிய பூங்காக் கழகம் போன்ற அமைப்புகளின் முயற்சியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வெளிப்புற நடவடிக்கைகளில் அப்பகுதிவாழ் மக்கள் ஈடுபட முடிகிறது என்று தமது ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். படம்: பெரித்தா ஹரியான்