லிட்டில் இந்தியா கடை வீட்டில் தீ

சுதாஸகி ராமன்

லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள கடை வீடு ஒன்றில் நேற்று தீ மூண்டது. ரோபர்ட்ஸ் லேன் எண் 7ல் உள்ள கடையில் ஏற்பட்ட தீயி னால் எவருக்கும் காயமில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. 'மைக்ரோ மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற மின்னியல் சாத னங்கள், பயணப் பெட்டிகள் போன்ற பொருட்களை விற்கும் கடையின் மேல் பகுதியில் தீ மூண்டபோது 29 வயது பைசாலும் அவரது மனைவியும் கடையில் வேலை செய்துகொண்டிருந்தனர்.

திடீரென கடுமையான வெப்பத்தை உணர்ந்த அவர்கள் உடனடியாக கடையில் இருந்து வெளியேறி னார். வெளியில் வந்த பிறகு தான் தங்கள் கடையின் மேல்தளம் எரிவதை அவர்கள் அறிந்தனர். ஊழியர்கள் தங்கும் மேல்பகுதியில் அப்போது எவரும் இல்லை என அறியப்படுகிறது.

தீப்பற்றி எரியும் கடை வீடு. படம்: முருகையா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!