சிங்கப்பூரில் 47 மில்லியன் ஆண்டுகள் பழமையான மிக அரிய வகை வண்டு

உலகின் மிக அரிதான வண்டு சிங்கப்பூரில் இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார் சுற்றுச்சூழலிய லாளரான மார்க் வோங். டிரைலைபைட் (Trilibite) என்ற இந்த வண்டு 47 மில்லியன் ஆண் டுகளுக்கு முன்னர் தோன்றிய உயிரினம் எனக் கணிக்கப்பட்டுள் ளது. ட்ரைலோபைட் என்பது தொன்மையான படிமங்களில் காணப்படும் கடல்வாழ் உயிரி னத்தின் பெயர்.

அந்த உயிரினம் இந்த வண்டு தோன்றுவதற்கு 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டது. அந்த உயிரினத்தைப்போல் முதுகுப் பகுதியில் கவசம் போன்ற அமைப் பைக் கொண்டிருப்பதால் இந்த வண்டுக்கு அந்தப் பெயர். இந்த வண்டைக் காண்பது மிக மிக அரிது. இந்த வண்டினம் 1800ல் கண்டுபிடிக்கப் பட்டதி லிருந்து இதுவரையில் ஆண், பெண் வண்டுகள் ஒன்றாக இரண்டே இரண்டு முறைதான் 1925, 1993 ஆகிய ஆண்டுகளில் காணப்பட்டுள்ளன.

'நேஷனல் ஜியாகிராஃபிக்' இளம் ஆய்வாளரான மார்க் வோங் சிங்கப்பூரின் வனப்பகுதியில் கண்டுபிடித்துள்ள மிக அரிதான டிரைலைபைட் வண்டு. இந்த வகை வண்டில் நாவல், பச்சை, கறுப்பு நிறங்கள் உள்ளன. ஆமையைப் போல் ஆபத்து வருகிறது என்றால் தலையை உள்ளே இழுத்துக்கொள்ளும் தன்மையும் இந்த வண்டுக்கு உண்டு. படம்: நேஷனல் ஜியாகிராஃபிக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!