உலகின் மிகப் பெரிய நிதித்துறை தொழில்நுட்ப விழா

முதல்முறையாக நடத்தப்படும் ஃபின்டெக் (FinTech) நிதித்துறை தொழில்நுட்ப விழாவில் கலந்து கொள்ள 50க்கும் மேலான நாடு களிலிருந்து சுமார் 11,000 பங் கேற்பாளர்கள் இவ்வாரம் சிங்கப் பூரில் கூடுவதாகச் சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது. ஒரு வாரகால நிகழ்ச்சியான இதுவே உலகின் ஆகப்பெரிய நிதித்துறை தொழில்நுட்ப நிகழ்ச் சியாகும். ஃபின்டெக் விழாவின் முதல் முக்கிய நிகழ்ச்சியான 'லாப் கிரால்' நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், 20க்கும் மேற் பட்ட வங்கிகளும் நிதிச்சேவை நிறுவனங்களும் தங்களது புத் தாக்க ஆய்வுக்கூடங்களைப் பொது மக்களின் பார்வைக்குத் திறந்துவிட்டன. அவற்றுள் ஒன்று ஆர்மீனியன் ஸ்திரீட்டில் அமைந் திருக்கும் அவிவா நிறுவனத்தின் டிஜிட்டல் கராஜ். இங்கு ஏ1 சாட் பாக்ஸ், பயன்பாட்டுக்குப் பணம் செலுத்தும் காப்புறுதிப் போன்ற புதுமையான தீர்வுகளைச் சுமார் 60 பேர் ஆராய்ந்து வருவதாக 'அவிவாவி'ன் தலைமை டிஜிட்டல் அதிகாரி ஆன்ட்ரூ பிரம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித் தாளிடம் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!