தென் கொரியாவில் ஜிஐசி முதலீடு

தென் கொரியாவின் சோல் நகரிலுள்ள ஜிலிஸ்குவேர் சிட்டி ரீட்டேல் காம்ப்ளெக்ஸ் உயர்தர கடைத்தொகுதியில் யுஎஸ்$136 மில்லியன் ($192.4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) முதலீடு செய்திருப்பதாக அரசாங்க முதலீட்டு நிறுவனம் (ஜிஐசி) நேற்று தெரிவித்தது. மொத்தம் 28 மாடிகளில் 238,248.43 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஜிலிஸ்குவேர் கடைத்தொகுதி 2012ல் கட்டி முடிக்கப்பட்டது.

சோலின் தென் மாநகர வட்டாரமான அன்யாங் நகரின் மையத்தில் கடைத்தொகுதி அமைந்துள் ளது. சுரங்க ரயிலுடன் கடைத்தொகுதி நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. கடைத்தொகுதியில் 34,681 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அலுவலகக் கட்டடமும் உள்ளது. தென் கொரியாவில் ஆக அதிகமான பகுதிவாரிக் கடைகள் நடத்தும் லாட்டே ஷாப்பிங் கம்பெனி கடைத் தொகுதியை நடத்துகிறது. தென் கொரியாவின் ஆகப்பெரிய நிலச்சொத்து நிர்வாக நிறுவனமான ஐஜிஐஎஸ் சொத்து நிர்வாக நிறுவனம் கடைத்தொகுதியை நிர்வகிக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!