அதிவிரைவு ரயில் ஒப்பந்தத்தை நோக்கி சிங்கப்பூர், மலேசியா

சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான அதிவிரைவு ரயில் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் அடுத்த மாதம் 5ஆம் தேதி கையெழுத்தாகும் என்று போக்குவரத்து அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஜோகூரில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று மலேசிய நாளிதழான ‘நியூ ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தகவல் வெளியிட்டத்தைத் தொடர்ந்து சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் அதிவேக ரயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாட்டு பிரதமர்களின் முன்னிலையில் கையெழுத்தானது.