நிறுவனத்துக்குச் சொந்தமான பணத்தைக் கையாடியதாக குற்றச்சாட்டு

கார் இறக்குமதி நிறுவனத்துக்குச் சொந்தமான 414,564 வெள்ளியைக் கையாடியதாக விற்பனை அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 23 வயது மலேசியரான சுவா பென் ஜுன் கடந்த மே மாதம் 17ஆம் தேதி முதல் இம்மாதம் 9ஆம் தேதி வரை இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. முன்பணம் வாங்கிய பிறகு சொன்னபடி கார்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யாதது குறித்து சுவா பணிபுரிந்த உள்ளூர் கார் நிறுவனத்துக்கு எதிராகப் பல புகார்கள் செய்யப்பட்டதாகப் போலிசார் தெரிவித்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையை அடுத்து, சந்தேகத்தின் பேரில் சுவா கடந்த ஞாயிற்றுக்கிழமை அங் மோ கியோ போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டெம்பனிஸ் சென்ட்ரல் 7, புளோக் 524 ஏக்கு நீலநிற மறுபயனீட்டுத் தொட்டியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

மறுபயனீடு எளிதாகிறது