சிறந்த 50 தொழில்முனைவர்களில் ஒருவராகப் பாடகர் முரளிகிருஷ்ணன்

முஹம்மது ஃபைரோஸ்

சிங்கப்பூரின் ஐம்பது உள்ளூர் நிறுவனங்கள் 'எண்டர்பிரைஸ்50' எனும் சிறந்த 50 தொழில்முனைவர் களுக்கான விருதை நேற்று முன் தினம் வென்றன. அச்சுத் தொடர்பான தீர்வுகளை வழங்கும் நிறுவனமான 'பிரிண்ட் லேப்', விருதுக்கு அங்கீகரிக்கப் பட்ட நிறுவனங்களில் ஒன்று. அதன் தலைமை நிர்வாக அதிகாரியான முரளிகிருஷ்ணன் ரங்கன், இந்நிறுவனத்தின் வளர்ச் சிக்கு மூல காரணமாக விளங்கு கிறார். இரண்டு பேருடன் 300 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு டன் 2007ல் தொடங்கப்பட்டது 'பிரிண்ட் லேப்'.

இப்போது 125 ஊழியர்களுக் கும் அதிகமானோர் பணிபுரியும் அலுவலகத்தின் பரப்பளவு கிட்டத் தட்ட 40,000 சதுர அடி. தொடக்கத்தில் சிறிய உள்ளூர் நிறுவனங்களுக்கு அச்சுத் தொடர்பான சேவைகளை வழங் கிய இந்த நிறுவனம், இப்போது விளம்பரப் பலகைகள், அறிவிப்பு கள், துண்டுப் பிரசுரங்கள், பெயர் அட்டைகள், சஞ்சிகைகள் என அனைத்து வகையான தீர்வுகளை யும் வழங்குகிறது. உள்ளூர் வங்கிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கார், விமான நிறுவனங்கள், ஹோட்டல் கள், செய்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட துறை களுக்கு அச்சு சேவை வழங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது 'பிரிண்ட் லேப்'.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!