2 தோ பாயோ நகர் அளவுக்கு தெக்கோங் தீவில் நிலமீட்பு

தெக்கோங் தீவின் வடமேற்கு கோடியில் புதிய ஒரு முறையைப் பயன்படுத்தி தோ பாயோ நகரத் தைப்போல இரண்டு மடங்கு பரப்பளவு கொண்ட நிலம் கடலி லிருந்து மீட்கப்படும். அந்த மீட்பு நிலம் ராணுவ பயிற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று அறிவித் தார். வடிகால்கள், நீர் அகற்று முறை, கால்வாய்கள் ஆகியவற்றின் கட்ட மைப்பை உருவாக்கி, தடுப்பு அரண் ஒன்றைக் கட்டி அதன்மூலம் கடலிலிருந்து அல்லது நீர்ப்பகுதி யிலிருந்து நிலத்தை மீட்கும் ஒரு முறை இங்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த முறைப்படி, நிலமீட்பு இடத்தில் இருக்கும் தண்ணீரை வடிகால்கள் மூலமாகவும் நீரை வெளியேற்றும் இயந்திரங்கள் மூல மாகவும் வெளியேற்றி கடல் மட்டத் திற்குத் தாழ்வான நிலப்பரப்பு உரு வாக்கப்படும். இப்படி உருவாக்கப்படும் நிலத் திற்கு அரணாக தடுப்பரண் இருக் கும். இந்த அரண் 10 கிலோ மீட் டர் நீளம் இருக்கும். இதன் அகலம் 15 மீட்டர் கடல் மட்டத்திலிருந்து இந்த அணை சுமார் 6 மீட்டர் உய ரம் இருக்கும். கடலிலிருந்து நிலத்தை மீட்க பொதுவாகப் பயன் படுத்தும் முறையின்படி, மீட்கப்படும் இடத்தில் மண் கொட்டி நிரப்பப் படும்.

(இடமிருந்து) வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சியோங் கூன் ஹியன், தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், வீவகவின் கட்டட, உள்கட்டமைப்புக் குழும இயக்குநர் யாப் தியாம் இயூ ஆகியோர் பூலாவ் தீக்கோங்கில் மீட்கப்பட்ட நிலத்தைப் பார்வையிடுகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!