ஓங்: வேலைச் சந்தை நிலையாக இருக்குமென எதிர்பார்ப்பு

வேலைச் சந்தை இவ்வாண்டைப் போலவே நீடித்திருக்கம் என்றும் வேலையின்மை நிலவரம் அடுத்த ஆண்டு மோசமடையாதிருக்கும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கல்வி அமைச்சரும் இரண்டாம் தற்காப்பு அமைச்சருமான ஓங் யி காங் கூறினார். சிங்கப்பூர்வாழ் மக்களின் வேலையின்மை விகிதம் தற்போது சுமார் 3 விழுக்காடு. சுகாதாரப் பராமரிப்பு, துல்லியப் பொறியியல், விமானத்துறை உள்ளிட்ட தொழில் துறைகள் நல்லபடியாகச் செயல்படுவதோடு இன்னமும் வேலைக்கு ஆள் சேர்த்து வருவதால், சிங்கப்பூரின் வேலை வாய்ப்புச் சந்தை “அப்படியொன்றும் மோசமில்லை” என்று புளூம்பர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திரு ஓங் நேற்று கூறினார்.

“அடுத்த ஆண்டு பல்வேறு துறைகள் வளர்ச்சியடைந்து, இப்போதைய வேலையின்மை நிலவரத்தை நிலைநாட்ட முடியும் என நம்புகிறோம். ஆனால் நீண்டகால வேலை யின்மை நிலவரமே அதிக முக்கியமானது. அதை எப்போதும் குறைவாகவே வைத்திருக்கிறோம். தொழிலாளர்கள் மறுதிறன் பெறுவதை உறுதிப்படுத்தி, நீண்டகால வேலையின்மை விகி தத்தைக் குறைவாக வைத்திருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது