மில்லியன் கணக்கில் சூதாடும் இணையச் சூதாட்டக் கும்பல் மீது குற்றச்சாட்டு

மில்லியன் கணக்கில் சூதாடும் இணையச் சூதாட்டக் கும்பல் ஒன்றை போலிஸ் முறியடித்திருக் கிறது. அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒன்பது ஆடவர்களும் இரு பெண் களும் நேற்று நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். அந்த 11 பேர் மீதும் இணையச் சூதாட்டச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் 40 வயதுக்கும் 68 வயதுக்கும் இடைப் பட்டவர்கள்.

சூதாடுபவர்களிடமிருந்து பந்த யப் பணத்தைப் பெற்று அதைப் பந் தயத்தில் கட்டுதல், பரிசுத் தொகையை அவர்களிடம் சேர்த் தல், பந்தயப் பிடிப்புக்கு முன்பணம் செலுத்துதல் போன்ற குற்றங்க ளுக்காக 11 பேரும் சட்டத்துக்கு முன் கொண்டு வரப்பட்டு உள்ள னர். அவர்கள் அனைவரும் கூடுதல் விசாரணைக்காக மத்திய போலிஸ் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வழக்கு விசாரணை டிசம்பர் 6ஆம் தேதி நீதிமன்றத்துக்கு வரும்.

ஒன்பது ஆடவர்களும் இரு பெண்களும் இணையச் சூதாட்டச் சட்டத்தின்படி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!