நீ சூன் வட்டாரத்தில் வலம் வரும் புதிய மூன்று சக்கர வாகனம்

நீ சூன் நகர மன்றம் அறிமுகப் படுத்திய மோட்டார் பொருத்தப்பட்ட புதிய மூன்று சக்கர வாகனம் தற் போது குடியிருப்புப் பேட்டைகளை வலம் வந்து கொண்டிருக்கிறது. இவ்வட்டாரத்தில் பணியாற்றும் துப்புரவு ஊழியர்களுக்காக இந்தப் புதிய வாகனங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் இத்தகைய வாகனத்தை நீ சூன் நகர மன்றமே முதலில் பயன்படுத்துகிறது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் நீ சூன் நகர மன்றம் கூறியது.

புதிய வாகனம் பற்றி கருத்துக் கூறிய துப்புரவாளர் சென் ஸியா னான், 62, “துப்புரவுப் பணிக்குத் தேவைப்படும் நேரம் பாதியாகக் குறைந்துவிட்டது,” என்றார். “குப்பைச் சேகரிக்கும் நிலையத் திலிருந்து குப்பைத் தொட்டி வெகு தொலைவில் இருந்தால் சில கிலோ மீட்டர் தூரம் தள்ளிக் கொண்டு வர வேண்டியிருக்கும். இதில் கார்ப்பேட்டை, சைக்கிள் பாதைகளையும் கடந்துச் செல்ல வேண்டும்.

புதிய மூன்று சக்கர வாகனத்தில் டார் நியூட்டன், 23, (இடம்), ஹனிஃப் முஹம்மட், 34. படம்: நீ சூன் நகர மன்றம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ