சிங்கப்பூர்-இந்தியா கூட்டு ராணுவப் பயிற்சியில் அமைச்சர் டாக்டர் மாலிக்கி

சிங்கப்பூர்-இந்திய ராணுவங்கள் இந்தியாவின் திவ்லாலி என்ற இடத்தில் சென்ற மாதம் 13ஆம் தேதி முதல் இம் மாதம் 3ஆம் தேதி வரை இருதரப்பு கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்துகின்றன. 'அக்னி வாரியர்' என்று குறிப்பிடப்படும் அந்தப் பயிற் சியை நேரடியாகப் பார்வையிட சிங்கப்பூரின் தற்காப்பு, வெளி யுறவு மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் சென்ற மாதம் 27 முதல் நேற்று வரை இந்தியா வுக்குச் சென்றிருந்தார். இந்தப் பயிற்சி, இத்தொடரில் இடம் பெறும் 10வது பயிற்சியாகும். இதில் இரு நாடுகளின் ராணுவங்களைச் சேர்ந்த சுமார் 240 வீரர்கள் பங்கு கொள் கிறார்கள். டாக்டர் மாலிக்கி தமது வருகையின்போது உண் மையான குண்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியைப் பார்வையிட்டதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

'அக்னி வாரியர்' பயிற்சியின்போது டாக்டர் மாலிக்கி (வலது) சிங்கப்பூர் ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களுடன் உரையாடுகிறார். படம்: தற்காப்பு அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!