சிங்கப்பூர்-மலேசியா அதிவேக ரயில் உடன்பாடு கையெழுத்து ஒத்திவைப்பு

மலேசியாவும் சிங்கப்பூரும் அதிவேக ரயில் திட்டம் பற்றிய இருதரப்பு உடன்பாட்டில் கையெழுத்திடுவதை ஒத்திவைத்தி ருக்கின்றன. நிர்வாகப் பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்று மலேசியாவின் பிரதமர் துறையைச் சேர்ந்த ஓர் அமைச்சரை மேற்கோள்காட்டி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது. பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கும் இம்மாதம் 5ஆம் தேதி ஜோகூர் பாருவில் சந்தித்து, அந்த உடன்பாட்டில் கையெழுத்திடப்படுவதை நேரடியாகப் பார்வையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த உடன்பாட்டு கையெழுத்து நிகழ்ச்சி டிசம்பர் 21ல் இடம்பெறலாம் என்று மலேசியா யோசனை தெரிவித் திருப்பதாக அமைச்சர் அப்துல் ரஹ்மான் தலான் தெரிவித் ததாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!