டிபிபி உடன்பாட்டை விரைந்து அமலாக்க சிங்கப்பூர்-ஜப்பான் வேண்டுகோள்

பசிபிக் பங்காளித்துவ வர்த்தக உடன்பாடு (டிபிபி) அங்கீக ரிக்கப்பட்டு கூடிய விரைவில் அமலுக்கு வரும் என்று தாங் கள் நம்புவதாக சிங்கப்பூரும் ஜப்பானும் நேற்று அறிவித்தன. ஜப்பான், சிங்கப்பூர் இடையிலான 50 ஆண்டுகால அரசதந் திர உறவை குறிக்கும் வகையில் அந்த நாட்டிற்கு ஒன்பது நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் சிங்கப்பூர் அதிபர் டாக்டர் டோனி டான் கெங் யாம், நேற்று இரவு ஜப்பா னியப் பிரதமர் அபேயைச் சந்தித்தார்.

பசிபிக் பங்காளித்துவ உடன்பாட்டில் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. அமெரிக்கா வின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டிரம்ப் அந்த உடன்பாட்டை ஆதரிக்கவில்லை. இதனால் பசிபிக் பங்காளித்துவ வர்த்தக உடன்பாட்டின் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கிறது.

சிங்கப்பூர், ஜப்பானிய தலைவர்கள் வட்டார, ராணுவ பிரச் சினைகள் குறித்தும் விவாதித்தனர். அமெரிக்கா-ஜப்பான் பாதுகாப்புக் கூட்டணி ஏற்பாட்டின்கீழ் இந்த வட்டாரத்தில் ஜப்பான் தொடர்ந்து ஆக்ககரமான பணியாற்றி வருவதை சிங்கப்பூர் வரவேற்பதாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.2016-12-02 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!