சிகிச்சைக்குப் பின் எட்டு வார மருத்துவ விடுப்பில் சார்ல்ஸ் சோங்

பொங்கோல் ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சோங் மருத்துவ சிகிச்சைக்குப் பின் எட்டு வார மருத்துவ விடுப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அவருக்கான சிகிச்சை வியாழக் கிழமையன்று தேசிய பல்கலைக் கழக மருத்துவமனையில் மேற் கொள்ளப்பட்டதாக மக்கள் வெள்ளிக்கிழமை வெளிடப்பட்ட செயல் கட்சியின் அறிக்கை தெரி வித்தது. அவருடைய நிலைமை சீராக இருப்பதாகவும் அறிக்கை கூறியது. எனினும், அவருக்கு என்ன விதமான சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது என்பதை அறிக்கை விளக்கவில்லை.

திரு சார்ல்ஸ் சோங்கிற்கு வயது 63. அவருடைய விடுப்பு காலத்துக்குப் பிறகு தொகுதிப் பணிகளில் அவர் படிப்படியாக ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அவர் தனது உடலை வருத்திக் கொள்வது, பொது மக்களுடனான தொடர்பு ஆகிய வற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக மக்கள் செயல் கட்சியின் அறிக்கை விளக்கியது. அவருடைய விடுப்பு காலத்தில் அருகிலிருக்கும் பாசிர் ரிஸ்- பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான தமது சகாக்களை தமது பொங்கோல் ஈஸ்ட் தொகுதியை கவனித்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!