சிங்டெல் அகண்ட அலைவரிசை இணைய சேவை பாதிப்பு

தொலைத் தொடர்புச் சேவை வழங்கும் சிங்டெல் நிறுவனத்தின் கண்ணாடியிழை அகண்ட அலை வரிசை இணைய சேவை நேற்று தடைப்பட்டது. இணைய சேவையில் ஏற்பட்ட இந்தப் பாதிப்பு குறித்து அந்த நிறுவனம் நேற்றுக் காலை 9.43 மணிக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. “அகண்ட அலைவரிசை இணைய சேவையைப் பெறுவதில் வாடிக்கையாளர்களில் சிலர் சிரமத்தை எதிர்நோக்கலாம்,” என்று அந்தப் பதிவில் சிங்டெல் கூறியிருந்தது. பிரச்சினையைக் களைய பொறியாளர்கள் தீவிரமாகப் பணி யாற்றி வருவதாகத் தெரிவித்த சிங்டெல், பொறுமையுடன் இருப்ப தற்காக வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டது. இரவு 8 மணி வரை அந்தப் பிரச்சினை சரிசெய்யப்படவில்லை. விவரம் - அச்சுப்பிரதியில்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டெம்பனிஸ் சென்ட்ரல் 7, புளோக் 524 ஏக்கு நீலநிற மறுபயனீட்டுத் தொட்டியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

மறுபயனீடு எளிதாகிறது