மசெக மத்திய செயல் குழுவிற்கு 12 பேர்

மக்கள் செயல் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு 12 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். கட்சியின் கொள்கைகளை உரு வாக்கும் ஆக உயரிய அமைப்பான மத்திய செயற்குழுவிற்கு ஆக அதிக வாக்குகளுடன் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கும் 12 பேரும், 2017 முதல் இரண்டு ஆண்டு காலத்திற்கு அந்தப் பொறுப்பை வகிப்பார்கள். செயற்குழுவிற்குத் தேர்வு பெற்றவர்களில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் இப்போது செயற்குழு விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக் கிறார். கட்சியின் பொதுச் செயலாள ராக லீ சியன் லூங் இருப்பார். தலைவராக கோ பூன் வான், துணைத் தலைவராக யாக்கூப் இப்ராஹிம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் மக்கள் செயல் கட்சியின் 34வது கட்சி மாநாடும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நேற்று நடந்தன. அதில் கட்சியின் மத்திய செயற் குழுவுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!