‘சிங்கப்பூர்- தமிழ்நாடு உறவில் நாட்டம் கொண்டவர்’

சிங்கப்பூர் சார்பாகவும் ஜெயலலிதா வுக்கு இ-றுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்றுக் காலை சென்னை சென்று ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு இருந்த ஜெய லலிதா உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதிமரியாதை செலுத் தினார். முன்னதாக, தமிழக முதலமைச்ச ராகப் பொறுப்பேற்று இருக்கும் ஓ. பன் னீர்செல்வத்துக்கு டாக்டர் விவியன் இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பினார். "முன்னாள் முதலமைச்சர் ஜெய லலிதா தமது தலைமைத்துவத்தின் வழியாக தமிழ்நாட்டில் சமூக பொரு ளியல் வளர்ச்சிக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். "அவரது அந்த அர்ப்பணிப்பு காரண மாக இந்தியாவில் தொழில் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் வளர்ச்சி கண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ் நாடு மாறியது. "அது மட்டுமின்றி, சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் அணுக்க உறவுகளை ஏற்பட ஜெயலலிதா தமது வலுவான ஆதரவை வழங்கினார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். படம்: வெளியுறவு அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!