புதிய ஆய்வுக்கூடம்

கப்பல் நிறுவனங்கள் தங்கள் பசு மைத் திட்டங்களைக் குறைந்த செலவில் மேற்கொள்ள உதவுவ தற்கு புதிய கடல்துறை ஆய்வுக் கூட்டம் ஒன்று நேற்று திறக்கப் பட்டுள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தில் (என்டியு) அமைந்துள்ள செம்ப்கார்ப் கடல் துறை ஆய்வுக் கூடத்தின் ஆராய்ச்சியாளர்கள் கப்பலின் எரி பொருள் பயன்பாட்டு அம்சத்தை ஆராய்ந்து அதில் மாற்றங்களைக் கொண்டு வர முயல்வார்கள். அதன்படி கப்பலில் டீசல், சுத்தமான எரிபொருள் என இரு வகை எரிபொருளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். கப்பல் நிறுவனங்கள் டீசலுக் குப் பதிலாக சுத்தமான எரிபொரு ளைப் பயன்படுத்துவதற்கு ஏது வாக, தங்கள் கப்பல்களில் சுத்த மான எரிபொருளை ஏற்றுக்கொள் ளும் இயந்திரத்தைப் பொருத்தும் போது அதற்கான செலவு விண்ணை எட்டுவதாக உள்ளது என்று கூறப்பட்டது. இந்த ஆய்வுக்கூடத்தை செம்ப் கார்ப் மரின் நிறுவனத்தின் தலை வரும் தலைமை நிர்வாக அதிகாரி யுமான திரு வோங் வெங் சன் திறந்து வைத்தார்.

டீசல், சுத்தமான எரிபொருள் ஆகிய இரு வகை எரிபொருளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய கப்பல் இயந்திரத்தை உருவாக் கும் ஆய்வுக்கூடம். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!