$343,000 ‘கொம்கேர்’ நிதியைத் திருடிய ஆடவர்

சமூகச் சேவை ஊழியரான 33 வயது சியா குவாங் ஹுவீ 'கொம்கேர்' எனப்படும் சமூகப் பராமரிப்பு நிதிக்காக திரட்டப்பட்ட 343,000 வெள்ளியைத் திருடியது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. குறைந்த வருமான, வசதி குறைந்த தனிநபர்களுக்காகவும் குடும்பங்களுக்காகவும் திரட்டப் பட்ட பணத்தை சியா 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை கையாடினார். திருடிய பணத்திலிருந்து 130,000 வெள்ளியைப் பயன் படுத்தி அவரும் அவருடைய உறவினர்களும் வாங்கிய கடன் களை அடைத்தார். அதுமட்டுமல்லாது, ஏறத்தாழ 100,000 வெள்ளியை அவர் தமது உறவினர்களுக்குப் பரிசாக வழங்கினார். மீதமுள்ள 110,000 வெள்ளியைப் பயன்படுத்தி அவர் விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொண்டார். சுற்றுலாப் பயணங்களுக்கும் பணத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!