முதியோர் கடக்கும் இடங்களாக (சில்வர் ஸோன்) மேலும் பத்து இடங்கள் அடையாளம் காணப் பட்டிருப்பதாக நிலப் போக்கு வரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது. இந்தப் பத்து இடங்களையும் சேர்த்து சிங்கப்பூரில் வரும் 2019ஆம் ஆண்டுக்குள் முதி யோர் கடக்கும் இடங்கள் மொத் தம் 25 இருக்கும். இதைத் தவிர, அடுத்த 25 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, 2023ஆம் ஆண்டுக் குள் அவை தயாராகிவிடும். தற்போது முதியோர் கடக்கும் ஒன்பது இடங்கள் உள்ளன என்றும் மேலும் ஆறு இடங்கள் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்குத் தயாராகி விடும் என்றும் ஆணையம் கூறியது.
முதியோர் கடக்கும் இடங்கள் எனும் திட்டத்தை அறிமுகப்படுத் தியதற்காக நிலப் போக்குவரத்து ஆணையத்துக்கு ஓர் அனைத் துலக விருதும் கிடைத்துள்ளது. 'பிரின்ஸ் மைக்கல்' அனைத்துலக சாலைப் பாதுகாப்பு விருது எனும் அவ்விருதுக்காக உலகம் முழுவதிலும் இருந்து 60க்கு மேற் பட்ட நியமனங்கள் கிடைக்கப் பெற்றன.
சிங்கப்பூரில் வரும் 2019ஆம் ஆண்டுக்குள் முதியோர் கடக்கும் இடங்கள் மொத்தம் 25 இருக்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்