சிங்கப்பூர் அனைத்துலக சமரச மன்றத்தின் இயக்குநர்கள் சபையின் தலைவராக இன்று டிசம்பர் 16 முதல் மூத்த வழக்கறிஞர் தவீந்தர் சிங் நியமிக்கப்பட்டி ருக்கிறார். இவர், சிங்கப்பூரின் அடுத்த தலைமைச் சட்ட அதிகாரியாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள லூசியன் வோங்கிடமிருந்து இந்தப் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். திரு சிங், ட்ரு & நேப்பியர் எல்எல்சி சட்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாவார்.
சிங்கப்பூர் அனைத்துலக சமரச மன்றம் இந்த விவரங்களை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இதற்கிடையே, சமரச மன்றத்தின் நிர்வாக சபைக்கு தலைவராக பொறுப்பேற்கும் திரு சிங்கின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த நிலையம் இன்னும் உச்சத்திற்கு உயரும் என்று தான் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாக நேற்று அறிக்கை ஒன்றில் திரு வோங் தெரிவித்தார். புதிய நியமனம் பற்றி கருத்துத் தெரிவித்த திரு சிங், திரு வோங்கை தொடர்ந்து இந்த தலைமைப் பொறுப்பைத் தாம் ஏற்பது குறித்து பெருமை கொள்வதாகக் கூறினார்.
சிங்கப்பூர் அனைத்துலக சமரச மன்றத்தின் இயக்குநர்கள் சபையின் தலைவராக பொறுப்பு ஏற்கும் மூத்த வழக்கறிஞர் தவீந்தர் சிங். கோப்புப்படம்