சுதாஸகி ராமன்
சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் பெங்களூரு நகரத்திற்கு நேரடியாக பயணம் செய்ய பயணிகள் இனி ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் சேவையைத் தேர்ந்தெடுக்கலாம். டிசம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் இந்தப் புதிய சேவை ஆரம்பமானது. இதுவரை சென்னை, புது டெல்லி, மும்பை ஆகிய மூன்று நகரங்களுக்கு 'ஜெட் ஏர்வேஸ்' விமான சேவைகளை வழங்கி வருகிறது. கட்டுப்படியாகும் கட்டணத்தில் சுமார் 30 கிலோ எடையிலான பயணப் பைகளை எடுத்துச் செல்லவும் இந்த விமான சேவையைப் பயணிகள் இனி பயன்படுத்தலாம். தினமும் இரவு மணி 7.15 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானம், இந்திய நேரப்படி இரவு மணி 9.15 மணிக்கு தரையிறங்கும். மேலும் பல சிங்கப்பூரர்கள் இந்தச் சேவையை தேர்வு செய்ய ஊக்குவிக்கும் நோக்கில் லாக்சா, சாத்தே போன்ற உள்ளூர் உணவுகளையும் 'ஜெட் ஏர்வேஸ்' இந்த சேவையில் வழங்குகிறது.
கடந்த புதன்கிழமை அன்று சாங்கி விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ்ஸின் புதிய சேவையின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட (இடமிருந்து) சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ஜாவீத் அஷ்ரஃப் சிங்கப்பூரின் பொதுத் தூதர் திரு திரு கோபிநாத் பிள்ளை, ஆகியோர். படம்: ஜெட் ஏர்வேஸ்