தனியார் வீடுகள் விற்பனை நவம்பரில் 31.4% குறைவு

சிங்கப்பூரில் புதிய தனியார் வீடுகளுக்கான கிராக்கி நவம்பரில் குறைந்தது. அத்தகைய வீடு களுக்கு 15 மாத காலத்தில் இல்லாத அளவிற்கு சென்ற அக் டோபரில் அதிக தேவை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நவம்பர் மாதம் அத்தகைய வீடுகளுக்கான தேவை குறைந்து விட்டது. வீடுகளைக் கட்டி விற்பவர்கள் சென்ற மாதம் 860 வீடுகளை விற்றார்கள். அக்டோபர் மாதத் துடன் ஒப்பிடுகையில் இது 31.4% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

நகர சீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இந்த விவரங்கள் தெரிய தனியார் வீடுகள் விற்பனை நவம்பரில் 31.4% குறைவு வருகின்றன. சிங்கப்பூரில் கடந்த அக்டோபர் மாதம் 1,253 தனியார் வீடுகள் வாங்கிக்கொள்ளப்பட்டன. இது 15 மாத காலத்தில் இல்லாத அளவிற்கு ஆக அதிகமாகும். இந்தச் சந்தையைக் கண் காணித்து வரும் பேராளர்கள், நவம்பர் மாதம் இந்த அளவிற்கு வீடு விற்பனை குறையும் என்று எதிர்பார்க்கவில்லை. சென்ற ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடு கையில் நவம்பர் மாத விற்பனை 13.3% அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!